சிறுவர் கல்வி மேம்பாட்டு அமைப்பு (FACE) இன் நிர்வாக மேற்பார்வையின் கீழ், அன்புநெறி கனடா அமைப்பின் அனுசரணையில் வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் மற்றும் நேரியகுளம் பகுதி சிறுவர்களின் ஆரம்ப கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் "கதிரொளி முன்பள்ளி"
அன்புநெறி கனடாவின் இணைப்பாளர்
திரு.சி. சிவகுமாரன் தலைமையில் முன்பள்ளி கட்டிட திறக்கும் நிகழ்வு
29/01/2026 காலை 11:00 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது பெயர் பலகையினை உத்தியோகபூர்வமாக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. தவமலர் மனோகரராஜா திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து *அமரர் நடராஜா ஸ்ரீதரன் உருவப்படத்திற்கு * அவர்களின் உறவினர் மலர்மாலை அணிவித்தனர்.பின்னர் அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களினால் முன்பள்ளி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது பொங்கல் விழாவும் நடைபெற்றது.
இந்நிகழ்வினை கலந்து சிறப்பிப்பதற்கு
இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளரும், சிறப்பு விருந்தினாராக எமது சிறுவர்கல்வி மேம்பாட்டு அமைப்பின் ( FACE ) சர்வதேச இணைப்பாளரும், சிறுவர்கல்வி மேம்பாட்டு அமைப்பின் மாவட்ட இணைப்பாளரும் ,அபிவிருத்தி உத்தியோகத்தர் ,வீரபுரம் கிராம உத்தியோகத்தர் ,அமரர் திரு .நடராஜா ஸ்ரீதரன் அவர்களின் உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர் ,முன்பள்ளி ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் கிராம அபிருத்தி சங்கத் தலைவர் ,செயலாளர் ,மற்றும் கிராம மட்ட சமூக அமைப்பின் உறுப்பனர்களும் கலந்து கொண்டனர்.
கதிரொளி முன்பள்ளி கட்டிடம் திறக்கும் நிகழ்வு – Sponsored by Anpuneri





























































